Connect with us

சினிமா

67 கோடியா…அதுகூட கம்மிதான்..! – சிவகார்த்திகேயனின் பிஸ்னஸ் மார்க்கெட் விபரங்கள்…

Published

on

Loading

67 கோடியா…அதுகூட கம்மிதான்..! – சிவகார்த்திகேயனின் பிஸ்னஸ் மார்க்கெட் விபரங்கள்…

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஆரம்பித்து, இன்று பாக்ஸ் ஆஃபிஸ் புலியாக மாறியுள்ள இவர், சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் மூலம் ரசிகர்களிடம் மட்டுமல்ல, திரையுலக வட்டாரங்களிலும் புதிய மதிப்பை பெற்றிருந்தார்.அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ திரைப்படத்தில் பெரிய அளவு எதிர்பார்ப்புடன் நடித்துவருகின்றார் . இந்தப் படத்தின் தமிழ்நாடு தியட்டர் ரைட்ஸ் மட்டும் கிட்டத்தட்ட 67 கோடிக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் உள்ளதென்பது சினிமா வட்டாரங்களில் பரவும் புதிய தகவலாக காணப்படுகின்றது.‘அமரன்’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இதுவரை தனது காமெடி மற்றும் குடும்ப படங்களுக்காக அறியப்பட்டிருந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் மூலம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்ற பரிமாணத்தில் அறிமுகமானார்.இந்நிலையில், அந்த படத்திற்கு கிடைத்த விமர்சன வரவேற்பு, வசூல் சாதனை, ரசிகர்களின் ஆர்வம் போன்றவை சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை மூன்று மடங்கு உயர்த்தி விட்டது என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளனர்.சமீபத்திய தகவலின்படி, ‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பரிசாக அமைந்தது. ஆனால் ‘மதராஸி’ படம் அவரை மார்க்கெட்டில் புதிதாக வரையறை செய்யும் ஒரு மைல்கல்லாக இருக்கும் எனச் சில கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன