வணிகம்
Post Office: சாமானிய மக்களுக்கு செம்ம திட்டம்… வெறும் ரூ. 50 முதலீடு செஞ்சா போதும்; ரூ. 1 லட்சம் வரை நல்ல ரிட்டன்!

Post Office: சாமானிய மக்களுக்கு செம்ம திட்டம்… வெறும் ரூ. 50 முதலீடு செஞ்சா போதும்; ரூ. 1 லட்சம் வரை நல்ல ரிட்டன்!
நம்முடைய எதிர்காலத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் இந்த திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுவதால், இதில் மக்களுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது. அந்த வகையில், ரெக்கரிங் டெபாசிட் திட்டம் தொடர்பான விவரங்களை தற்போது காணலாம்.பல்வேறு விதமான சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றில் சில திட்டங்களுக்கு நம்முடைய பணத்தை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிஸான் விகாஸ் பத்திரம் போன்றவற்றை கூறலாம். இது தவிர வேறு சில திட்டங்களுக்கு நம்முடைய பணத்தை ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இதில் முதலீட்டு தொகை அதிகமாக இருந்தால் மட்டுமே நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், எல்லோராலும் இதுபோன்று முதலீடு செய்ய முடியாது.இந்த சூழலில் ரெக்கரிங் டெபாசி திட்டம் பலருக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த திட்டத்தில் சிறிய தொகையை கூட நம்மால் எளிதாக சேமிக்க முடியும். இப்படி சிறுகச் சிறுகச் சேமிக்கும் தொகையை கொண்டு நமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது.குறிப்பாக, ஒவ்வொரு நாளும் ரூ. 50 சேமித்தால் கூட கனிசமான தொகையை நம்மால் அடைய முடியும். அதனடிப்படையில், ஒரு நபர் அஞ்சல் அலுவலகத்தின் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 1,500 சேமிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது 5 ஆண்டுகளில் ரூ. 90,000-ஐ அந்நபர் முதலீடு செய்திருப்பார். இதற்காக வழங்கப்பட்ட வட்டி தொகை ரூ. 17,050-ஆக இருக்கும். இதன் மூலம் 5 ஆண்டுகள் முடிவில் ரூ. 1,07,050 சேமித்திருக்க முடியும்.ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 செலுத்த முடியும். இதற்கென உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், உங்களால் முடிந்த அளவிற்கு தொகையை முதலீடு செய்யலாம். எனவே, சிறிய தொகையில் இருந்து சேமிப்பை தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஏற்றதாக இருக்கும்.