சினிமா
என்னது 80’s நடிகைகள் புடவை எல்லாம் share பண்ணுவாங்களா..? -சுஹாஷினி ஓபன்டாக்!

என்னது 80’s நடிகைகள் புடவை எல்லாம் share பண்ணுவாங்களா..? -சுஹாஷினி ஓபன்டாக்!
தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகையாகவும், இயக்குநர் மணிரத்தினத்தின் வாழ்க்கைத் துணைவியாகவும் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் சுஹாஷினி மணிரத்தினம். சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் கலந்து கொண்ட அவர், தனது குடும்பம் மற்றும் 80’s நட்சத்திரங்களோடு இருந்த பழைய காலங்களை மிக உருக்கமாகவும், சிரிப்பூட்டும் நிமிடங்களோடும் பகிர்ந்துள்ளார்.பேட்டியின் ஒரு கட்டத்தில், தனது மகனைப் பற்றியும், அவருடனான உறவு குறித்தும் நேர்மையாகப் பகிர்ந்த சுஹாஷினி, “என் மகன் 14 வருஷம் வெளியூரில் படிக்கப் போயிருந்தான். அதனால நாங்க closeness மாதிரி இருந்ததில்லை. அவன் தன்னுடைய futureகாக வெளியூர் போனான். அதுக்கு நான் ஒரு தடையாக இருந்தது கிடையாது.” என்று உண்மையை வெளிப்படையாகக் கூறினார்.தனது கணவர் மணிரத்தினத்துடன் இருக்கும் உறவு பற்றிப் பேசிய சுஹாஷினி, “அவர் என்னை ‘ஹாசினி’ என்று தான் கூப்பிடுவார்… நானும் அவரை ‘மணி’ என்று தான் கூப்பிடுவேன்,” எனச் சிரித்தபடி சொன்னார். இவர்கள் இருவரும் பல வருடங்களாக திரைத்துறையின் மிக முக்கியமான ஜோடி என்றாலும், அவர்களது அழகான உறவு இன்னும் அப்படியே உயிரோடு இருக்கிறது என்பதை இந்தச் சொற்கள் உணர்த்தின.நெகிழ்வூட்டிய உரையாடலை, நகைச்சுவையுடன் பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்ற சுஹாஷினி, 80’s நடிகைகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மிக அற்புதமாக விவரித்தார். அதன்போது, “80’s நடிகைகள் எல்லாரும் dress-ஐ share பண்ணுவோம். ஒருத்தருக்கு கல்யாணம் இருந்தா, உடனே ‘dress வேணுமா? என்று கேட்டு share பண்ணிப்போம்.” என்றார். குறிப்பாக, “பூர்ணிமாவும், லிஷியும் கல்யாணத்துக்கு போகும் போது dress தேவை என்று சொன்ன உடனேயே அவங்க தங்களிட்ட இருக்கிற dressஐ அனுப்புவாங்க. அதோட சாறி வேணும் என்றால் குஷ்பு அனுப்பி வைப்பாங்க. அம்பிகா கூட அப்புடி share பண்ணித் தான் சாறி கட்டுறவங்க.” என்றார் சுஹாஷினி. அதைக் கேட்ட நடுவர், “இத என்னால நம்பவே முடியாமல் இருக்கு..!” என்று திகைத்துவிட்டார். சுஹாஷினியின் கருத்துக்களைக் கேட்ட ரசிகர்கள் ஹீரோயினியும் dress எல்லாம் மாத்திப்போடுவாங்களா? என்று கமெண்ட்ஸ் தெரிவிக்கின்றனர்.