சினிமா
ஒரேமுறை அப்படி இருந்தேன்!! ஆனால் யாரையும் இனி.. நடிகை பூனம் பாண்டே ஓபன்..

ஒரேமுறை அப்படி இருந்தேன்!! ஆனால் யாரையும் இனி.. நடிகை பூனம் பாண்டே ஓபன்..
பாலிவுட் சினிமாவில் கிளாமர் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூனம் பாண்டே, சமீபகாலமாக பொதுவெளியிலும் சரி, இணையத்திலும் சரி சர்ச்சையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தான் இறந்துவிட்டதாக தகவலை பரப்பி நாடகமாடி பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.இப்படியான நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனது சொந்த வாழ்க்கை குறித்து, அதிலும் பார்ட்னர்ஷிப் லைஃப் குறித்து பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் தயாரிப்பாளர் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், ஆனால் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்று அவர் பெயரை குறிப்பிடாமல் இருந்து வந்தார்.அந்த பேட்டியில், நான் இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் வரும் காலங்களில் யாரையும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன். ஆனால் ஒருமுறை லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், அப்போதுதான் நான் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன். அது என் மனதில் மிகப்பெரிய வலியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது, நான் அதிலிருந்து மெல்லமெல்ல மீண்டு வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ஒருமுறை நான் என் வீட்டில் சுயநினைவின்றி இருந்த என்னைமீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல்துறையினர் சீருடை, காவல்துறை அலுவலகம், மருத்துவமனை ஆகியவற்றை மீண்டும் நான் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம் எனக்குள் இப்போதும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நான் இன்னொரு உறவில் துணிந்து இறங்க முடியவில்லை.இதுபோன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், என் சிறிய வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன். வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, உங்கள் வாழ்க்கையையும் நேரத்தையும் விரயமாக்குவதை காட்டிலும் அவற்றைவிட்டுவிட்டு விலகிச்சென்று நிம்மதியாக வாழ்வதுதான் புத்திசாலித்தனம் என்று கூறியிருக்கிறார் பூனம் பாண்டே.