இலங்கை
கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி கைது

கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி கைது
வவுனியா – பூவரசங்குளம் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற முற்பட்ட குற்றச்சாட்டிலே காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று வவுனியா நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் இருந்து உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – பூவரசங்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, செட்டிக்குளம் பகுதியில் உள்ள நபரொருவர் வழங்கிய தகவலுக்கமைய நேற்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரால் கொள்வனவு செய்யப்பட்ட காணி சம்பந்தமான பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்காக சந்தேகநபரான காவல்துறை அதிகாரி குறித்த தொகையை கையூட்டலாகக் கோரியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.