Connect with us

சினிமா

சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண ஸ்ரீமதி!! குடும்பத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு..

Published

on

Loading

சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண ஸ்ரீமதி!! குடும்பத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.இந்நிலையில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை கூட சிறப்பாக பாடிய ஸ்ரீமதி வாங்கவில்லை. பலரும் அவர் முதல் 3 இடத்திலும் டைட்டிலை கைப்பற்றுவார் என்றும் எதிர்ப்பார்த்து இருந்தனர்.ஆனால் இறுதி போட்டியின் போது, ஸ்ரீமதியின் திறமைக்கு மிகப்பெரிய பரிசு ஒன்று கிடைத்திருக்கிறார். அதாவது, WeChai நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் மனோகர் தங்களில் நிறுவனத்தில் பல பிராண்ட்கள் பல இடங்களில் ஆரம்பித்திருக்கிறோம்.அதில், 1000 Franchise கடைகள் இருக்கிறது. அந்த முழு Franchise-ன் அட்வான்ஸ் முதல் கடை உருவாகும் செலவு வரை அனைத்தையும் இலவசமாக வைத்து தருகிறேன் என்று கூறியிருந்தார்.இதற்கு அவர்களின் பெற்றோர், வாழ்வாதாரத்திற்கு என்னை செய்வது என்று இருந்தோம் என்று கூறியதற்கு இது உங்களில் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று அந்த பரிசை டேவிட் மனோகர் அளித்துள்ளார். ஒருவரின் திறமைக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு இதுவாக இருக்கும் என்று ஸ்ரீமதிக்கு பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன