Connect with us

இலங்கை

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

Published

on

Loading

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (22) காலை 9 மணிக்கு மாவட்ட செயலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றதற்கமைய, இச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத் தேவைப்பாடுகள்  தொடர்பாக மாவட்ட செயலரால் ஆராயப்பட்டது.

Advertisement

இக்கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்பழை பிரதேசசெயலாளர் பிரிவில் காணப்படும் நீரிணைப்பிலிருந்து புதிதாக புதிய இணைப்புக்களை விஸ்தரிப்பதற்கும், தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கரவெட்டி, கோப்பாய் , சாவகச்சேரி, நல்லூா்,  யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இலவச நீர்விநியோகம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒவ்வொரு  பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 500 பயனாளிகள் தெரிவு செய்யவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் (கரவெட்டி , கோப்பாய் , சாவகச்சேரி, நல்லூா், தெல்லிப்பழை,  யாழ்பபாணம்  பருத்தித்துறை மற்றும் வேலணை), தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் மற்றும் மீள்குடியேற்றப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன