இலங்கை
பெரிய வெங்காய விலையில் ஏற்பட்ட மாற்றம்!

பெரிய வெங்காய விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த பண்டிகை காலத்தில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 280 ரூபாவாக உயர்ந்திருந்தது.
தற்போது, கடந்த சிறுபோகப் பருவத்தில் பயிரிடப்பட்ட உள்ளூர் பெரிய வெங்காயத்தின் இருப்பு தீர்ந்துள்ள நிலையில்
அடுத்த சிறுபோக அறுவடை வரை சுமார் பத்து மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.[ஒ]