இலங்கை
முந்திச் செல்ல முற்பட்டதால் பேருந்து – ஹைஏஸ் விபத்து

முந்திச் செல்ல முற்பட்டதால் பேருந்து – ஹைஏஸ் விபத்து
உமையாள்புரத்தில் சம்பவம்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும் ஹைஏஸ் வாகனமும் நேற்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
கொழும்பில் இருந்து வந்து கொண்டிருந்த அரச பேருந்து, ஹைஏஸ் வாகனத்தை முந்திச் செல்வதற்கு முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தெய்வாதீனமான எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.