வணிகம்
வாய்ப்பு இல்ல ராஜா… தங்கம் விலை ரூ. 8000-க்கு கீழே போகாது: அடித்துச் சொல்லும் ஆனந்த் சீனிவாசன்

வாய்ப்பு இல்ல ராஜா… தங்கம் விலை ரூ. 8000-க்கு கீழே போகாது: அடித்துச் சொல்லும் ஆனந்த் சீனிவாசன்
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் நினைக்கின்றனர். இந்த சூழலில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, ஒரு கிராம் தங்கம் ரூ. 8 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. அமெரிக்காவில் நெருக்கடி அதிகரிக்கும் போது, தங்கம் விலையும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது ஒரு தொடக்கம் தான் என்று ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். குறிப்பாக, தங்கத்தின் விலை ரூ. 8 ஆயிரத்திற்கு கீழ் இறங்க வாய்ப்பு இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காண்பிக்க வேண்டியதில்லை என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், ரூ. 7,500 என்ற அளவிற்கு கூட தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு கிடையாது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அறிவுறுத்துகிறார்.தங்கம் என்பது ஆபரணம் என்பதையும் கடந்து அதனை நிதி பாதுகாப்பாக இன்றைய சூழலில் மக்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக அதில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காண்பிக்கின்றனர். சந்தை நிலவரங்களை தினசரி ஆராய்ந்து எந்த வகையில் முதலீடு செய்யலாம் என்று தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.