Connect with us

இலங்கை

13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திம் செய்த பிக்கு கைது

Published

on

Loading

13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திம் செய்த பிக்கு கைது

இரத்தினபுரி 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குவே, எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு தாங்காமுடியாத அரிப்பு மற்றும் வயிறு கோளாறு காரணமாக, அந்த சிறுமி தன்னுடைய தந்தையுடன் கடந்த 18 ஆம் திகதியன்று விஹாரைக்கு சென்று பிக்குவை சந்தித்துள்ளனர்.

அன்றைய தினம் தேசிக்காயை வெட்டி, ஏதோ மந்திரம் செய்த பிக்கு, மறுநாள் வருமாறு கூறி, வரும்போது, வெட்டிய தேசிக்காயையும் எடுத்துவருமாறு, தேசிக்காயையும் கொடுத்து அனுப்பி​யுள்ளார்

அதேபோல், மறுநாளும் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு தந்தை, விஹாரைக்கு சென்றுள்ளார்.

Advertisement

இருவரையும் அமர சொன்ன பிக்கு, வெட்டி தேசிக்காயை வழிந்தோடும் நீரில் வீசி விட்டு வருமாறு தந்தையிடம் கூறியுள்ளார். பிக்கு கூறியதை அடுத்து, தேசிக்காயை எடுத்துக்கொண்டு, விஹாரையில் இருந்து தந்தை வெளியே சென்றுள்ளார்.

அப்போது, சிறுமியை தான் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிக்கு, அங்கு வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

தந்தை திரும்பி வந்தபோது, பிக்கு வசிக்கும் வீட்டில் இருந்து மகள் வெளியே வந்துள்ளார்.

Advertisement

தந்தையும் என்ன?என்ன? என்று கேட்டபோது, மகள் ஒன்றுமே கூறவில்லை.

எனினும், வீட்டுக்கு வரும் வழியில் தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், தந்தை செவனகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர் 42 வயதான பிக்கு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

வைத்திய பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுமி, அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன