சினிமா
ED விசாரணை..! பிரபல நடிகர்கள் சிக்குவார்களா..? இல்லையா..?

ED விசாரணை..! பிரபல நடிகர்கள் சிக்குவார்களா..? இல்லையா..?
பணமோசடி சர்ச்சையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ளார். இவர் தற்போது “பராசக்தி”,”இட்லி கடை “, “str 49″,”இதயம் முரளி ” போன்ற படங்களை தயாரித்து வருகின்றார். தனுஷின் இட்லி கடை படப்பிடிப்பு வேலைகள் முடிந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமான “பராசக்தி ” படம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் சிம்பு ,தனுஷ் ,சிவகார்த்திகேயன் ஆகியோர் தயாரிப்பாளரிடம் சம்பள முன்பணத்தினை பெற்று கொண்டமையினால் இவர்களுக்கு வழங்கப்பட்ட படம் கறுப்பு பணமா இல்லையா எனும் விசாரணை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த சர்ச்சையில் சென்சேஷனல் நடிகை கஜாடு லோகரும் மாட்டி கொண்டதாக தெரியவந்துள்ளது.இவரது விசாரணைகள் அனைத்தும் முடியும் பட்ஷத்தில் தான் இந்த பாரிய எதிர்பார்ப்பில் உருவாகிய படங்கள் ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ED விசாரணை நடிகர் சிவகார்த்திகேயனிற்கு மாத்திரம் அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஒரு சில வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.