சினிமா
அபிராமிக்கு முத்தம் கொடுக்க ரிகர்சல் பார்த்தேன்!! கமல் ஹாசன் கொடுத்த ஷாக்..

அபிராமிக்கு முத்தம் கொடுக்க ரிகர்சல் பார்த்தேன்!! கமல் ஹாசன் கொடுத்த ஷாக்..
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது தக் லைஃப் படம்.இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தக் லைஃப் படத்தின் சுகர் பேபி என்ற இரண்டாம் பாடல் வெளியாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் தக் லைஃப் படக்குழுவினர், பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் யூகி சேது, படத்தின் டிரைலரில் நான் பார்த்து வியந்தது, கமல் ஹாசனும் நீங்களும்(அபிராமி) முகத்திற்கு முகம் வைத்து பேசிக்கொள்கிறீர்கள், திரிஷாவுக்கு கூட பினால் இருந்துதான் முத்தம் கிடைத்தது.ஆனால் உங்களுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்துவிட்டாரே என்று கேள்வியை அபிராமியிடம் கேட்டுள்ளார். அதற்கு கமல் ஹாசன், இதெல்லாம் நாங்கள் விருமாண்டி படத்திலேயே ரிகர்சல் பார்த்துவிட்டோம், விடுங்க சார் என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். இதை கேட்ட சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.