Connect with us

உலகம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

Published

on

Loading

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு இல்லையெனில், இந்த மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களில் 27 சதவீதம் பேர் சர்வதேச மாணவர்கள். இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர்.

Advertisement

அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், நிர்வாகத்தின் நடவடிக்கையை கூட்டாட்சி நீதிமன்றம் தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பல்கலைக்கழகம் பதிலளித்தது.

மேலும், நிர்வாகம் கூட்டாட்சி நீதிமன்ற நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த 72 மணி நேரத்திற்குள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் குறித்த முழுத் தகவலையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisement

எவ்வாறாயினும், டிரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை ஹார்வர்டில் படிக்கும் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்களைப் பாதிக்கும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, டிரம்பின் பரிந்துரைகளைப் பின்பற்றாததற்காக, அந்தப் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய 2.3 பில்லியன் டொலர் மத்திய உதவியை அமெரிக்க அரசு முடக்கியது.

மாணவர் சக்தியைக் குறைத்தல், அமெரிக்க மதிப்புகளைப் பின்பற்றாத மாணவர்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்தல் மற்றும் பல திட்டங்களை ரத்து செய்தல் ஆகியவை டிரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகளில் அடங்குகின்றன.

Advertisement

இதற்கிடையில், கூட்டாட்சி நீதிமன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு தற்காலிக நிவாரணத்தை வழங்கும். வெளிநாட்டு மாணவர்களின் விசா நிலையை ரத்து செய்வதையும், அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதையும் நீதிமன்றம் தடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன