Connect with us

சினிமா

இரண்டாவது நாளே வசூலில் அடிவாங்கிய தக் லைஃப்.. கமல், சிம்புவுக்கு இப்படியொரு நிலைமையா

Published

on

Loading

இரண்டாவது நாளே வசூலில் அடிவாங்கிய தக் லைஃப்.. கமல், சிம்புவுக்கு இப்படியொரு நிலைமையா

கமல் – சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்த தக் லைஃப் திரைப்படம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 5ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை மணி ரத்னம் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூல் ரீதியாக இப்படம் பின்னடைவை சந்திக்க துவங்கியுள்ளது.முதல் நாள் உலகளவில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஆனால், இரண்டாவது நாளில் ரூ. 6 கோடி மட்டுமே உலகளவில் வசூலை ஈட்டியுள்ளது தக் லைஃப். இதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ. 52 கோடி மட்டுமே வசூல் வந்துள்ளது.இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்துள்ள மிகப்பெரிய அடியாகும். கமல், சிம்பு இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கே இப்படியொரு நிலைமையா பலரும் கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன