Connect with us

வணிகம்

டி.வி.எஸ்-ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் இணையத்தில் கசிந்ததாக தகவல்: ப்ரீமியம் அம்சங்களுடன் வருகிறதா?

Published

on

TVS E bike

Loading

டி.வி.எஸ்-ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் இணையத்தில் கசிந்ததாக தகவல்: ப்ரீமியம் அம்சங்களுடன் வருகிறதா?

டி.வி.எஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வரும் நிலையில், இந்தோனேஷியாவில் அந்நிறுவனம் பதிவு செய்துள்ள ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு இணையத்தில் கசிந்துள்ளது. டி.வி.எஸ்-ஸின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாக இருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.விரைவில் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டி.வி.எஸ் நிறுவனம் வெளியிடவிருப்பதாக அறிவித்ததிலிருந்து, அதுவே சந்தையில் பேசுபொருளாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் டி.வி.எஸ் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், இந்தோனேஷியாவில் டி.வி.எஸ் நிறுவனம் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பை காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது. தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ‘ஆர்பிட்டர்’ (Orbiter) என்ற பெயரை டி.வி.எஸ் நிறுவனம் பயன்படுத்த இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் உலா வந்தது. இந்தத் தகவலுக்கு இடையே, இந்தோனேஷியாவில் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பை டி.வி.எஸ் பதிவு செய்துள்ள செய்தி கசிந்துள்ளது. அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் என்ற அடிப்படையில் சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.பெரிய சக்கரங்கள் மற்றும் பல கோண வடிவங்களுடன் இதன் வீல்கள் சற்று  சிக்கலான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இதில், எக்சாஸ்ட் மஃப்ளர் இருப்பதாக தெரியாததால், இது நிச்சயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.வி.எஸ் ஐக்யூப் (iQube) ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் தனித்துவமான மற்றும் புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் டிசனை காணும் போது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டராக இருக்கும் என்று கருதப்படுகிறது.இந்நிலையில், இந்த ஸ்கூட்டரின் விலை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏனெனில், இதன் டிசைன் அமைப்பை பார்க்கும் போது, இது உயர் ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று காட்சி அளிக்கிறது. இதனால், விலையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன