Connect with us

சினிமா

த்ரிஷாவின் “Sugar Baby” வேடத்துக்கு எதிர்ப்பு! அப்போ சினேகா–அனுஷ்கா நடித்தால் தப்பில்லையா?

Published

on

Loading

த்ரிஷாவின் “Sugar Baby” வேடத்துக்கு எதிர்ப்பு! அப்போ சினேகா–அனுஷ்கா நடித்தால் தப்பில்லையா?

கமல்ஹாசனின் புதிய திரைப்படமாக உருவாகி, தற்போது திரையரங்குகளில் வெளியாகி பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.ஆனால் தற்போது இந்த படத்தில்  த்ரிஷா நடித்துள்ள ‘சுகர் பேபி’ கதாபாத்திரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாதியில், த்ரிஷா கமல்ஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழும் பெண்ணாக காட்சியளிக்கிறார்.ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில், கமலிடம் இருந்து பிரிந்து, த்ரிஷா சிம்புவுடன் புது காதல் வாழ்க்கை தொடங்குகிறார். சிம்பு ஒரு சமூக செயற்பாட்டாளராக, இளம் புரட்சியாளராக காட்சியளித்ததுடன் அவரை வழிநடத்தும் துணைவியாக த்ரிஷா காணப்படுகின்றார். இது சில விமர்சகர்களிடையே எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.இப்போது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சிலர் இப்படத்துடன் முந்தைய படங்களையும் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர். புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சினேகா, அதேபோல் வானம் படத்தில் அனுஷ்கா நடித்தது எல்லாம் தப்பில்லையா.? என்ற கேள்வி த்ரிஷா ரசிகர்களிடையே எழுந்துள்ளது. த்ரிஷா நடித்த ‘சுகர் பேபி’ கதாபாத்திரம், ‘தக் லைஃப்’ படத்தில் ஒரு முக்கியமான நகர்வு. அது நல்லதா? தவறா? என்பது பார்வையாளர்களின் மனநிலையைப் பொறுத்தது எனவும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன