Connect with us

பொழுதுபோக்கு

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த வதந்தி; எனக்கு ஒன்றும் புரியவில்லை: நடிகை அதுல்யா ரவி வேதனை!

Published

on

Athulya ravi

Loading

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த வதந்தி; எனக்கு ஒன்றும் புரியவில்லை: நடிகை அதுல்யா ரவி வேதனை!

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படமான ‘காதல் கண் கட்டுதே’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி, குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களின் இதயங்களை வென்ற இவர், “பக்கத்து வீட்டுப் பெண்” போன்ற தோற்றமும் இயல்பான நடிப்பும், அவருக்குத் திரையுலகில் ஒரு தனி இடத்தைப் பிடிக்க உதவின. அந்த படத்திற்கு பிறகு, ஏமாளி, ‘நாடோடிகள் 2’, ‘அடுத்த சட்டை’, ‘கேப்மாரி’ மற்றும் ‘முருங்கக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தனது திரைப்படப் பட்டியலைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார்.அந்த வகையில் தற்போது அதுல்யா ரவி நடிப்பில், அடுத்து ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’  என்ற திரைப்படம் ரிலீஸ்க்கு, தயாராகி வருகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற, நடிகை அதுல்யா ரவி, படத்தில் தனது கேரக்டர் மற்றும் படக்குழுவில் அவரது அனுபவம் குறித்துப் பேசினார். விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம், தனது முந்தைய திரைப்படங்களை விட ஒரு தீவிரமான மற்றும் தைரியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.இந்த படத்தில் அதுல்யா ரவியின், தோற்றம் சற்று வித்தயாசமாக இருப்பதால், அவர் தனது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து இந்த சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நேரடியாகப் பதிலளித்த அதுல்யா ரவி, “அத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் எந்த உண்மையும் இல்லை. நான் எந்த ஒரு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை. இந்த ஆதாரமற்ற தகவல்கள். ஏன், எப்படி இது போன்ற தகவல்கள் வெளியாகிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று கூறினார்.அமைதியாகவும் நேர்த்தியாகவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அதுல்யா ரவி, தனது தொழில் மற்றும் வரவிருக்கும் படத்தின் ரிலீஸில் கவனம் செலுத்தி வருகிறார். அதுல்யாவின் இந்த நேரடியான பதில் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.  மேலும் பலர் அவரது நேர்மையைப் பாராட்டி வருகின்றனர். ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’  படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், அதுல்யா ரவி இந்த படத்தின் மூலம் இணையத்தில் கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன