Connect with us

உலகம்

புடின் நெருப்போடு விளையாடுகிறார் – டிரம்ப்

Published

on

Loading

புடின் நெருப்போடு விளையாடுகிறார் – டிரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நெருப்புடன் விளையாடுகின்றார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் இல்லாவிட்டால் ரஷ்யாவிற்கு நிறைய மோசமான விடயங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை விளாடிமிர் புட்டின் உணரத்தவறுகின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப், புட்டின் நெருப்புடன் விளையாடுகின்றார் எனவும் தெரிவித்தார்.

Advertisement

டிரம்ப், தான் இல்லாவிட்டால் ரஷ்யா எதிர்கொண்டிருக்ககூடிய மோசமான விடயங்கள் என்னவென்பது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.

வார இறுதியில் புட்டின் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது குறித்து டிரம்ப் ஆராய்ந்து வருகின்றார் என தெரிவித்துள்ள அமெரிக்க ஊடகங்கள் டிரம்ப் தனது மனதை மாற்றிக்கொள்ளக்கூடும் எனவும் தெரிவித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன