Connect with us

சினிமா

ரூ. 200 கோடிக்கும் மேல் பட்ஜெட்!! ரிலீஸே ஆகாமல் தக் லைஃப் படத்தின் லாபமே இத்தனை கோடியா?

Published

on

Loading

ரூ. 200 கோடிக்கும் மேல் பட்ஜெட்!! ரிலீஸே ஆகாமல் தக் லைஃப் படத்தின் லாபமே இத்தனை கோடியா?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே கமல் ஹாசன், கன்னட மொழி பற்றி பேசிய விவகாரத்தில் கர்நாடகாவில் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதுவரை தக் லைஃப் படத்துக்கான டிக்கெட் புக்கிங் இந்தியளவில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையாகியுள்ளதாம். சுமார் 77 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.மேலும் ப்ரீ புக்கிங்கில் இதுவரை உலகளவில் மொத்தம் ரூ. 20 கோடி வரை கலெக்ஷனாகியுள்ளதாம். பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் இன்னும் காலை 9 மணி காட்சிகளுக்கு முன்பதிவு துவங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.ஆனால் அதற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். டிக்கெட் புக்கிங் எல்லாமே இதுவரை ஆரஞ்சு அலர்ட்டில் தான் காணப்படுகிறது.அப்படி பார்க்கும் போது முதல் நாள் வசூல் மட்டுமே உலகளவில் 40 முதல் 50 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸ் இருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், தக் லைஃப் படம் சுமார் ரூ. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி உரிமை, ஓடிடி உரிமை, தியேட்டர் விற்பனை உள்ளிட்ட அனைத்து விற்பனையும் சேர்த்து ரூ. 210 கோடி பிசினஸாகியுள்ளதாம். டேபிள் பிராஃபிட் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை இதுவரை லாபம் பெற்றிருக்கிறதாம் தக் லைஃப். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன