Connect with us

இலங்கை

விமான விபத்து; 27 ஆண்டுகளுக்கு முன்பும் அதிசயம் நிகழ்த்திய 11A இருக்கை !

Published

on

Loading

விமான விபத்து; 27 ஆண்டுகளுக்கு முன்பும் அதிசயம் நிகழ்த்திய 11A இருக்கை !

நேற்று முன் தினம் (12)  இந்தியாவின்  அகமதாபாத்திலிருந்து  லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் AI 171 இருக்கையில் அமர்ந்தவர் உயிர்  பிழைத்த அதிசயம் சம்பவம்  ஒன்று   இடபெற்றுள்ளது.

இந் நிலையில் கடந்த  27 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று தாய் ஏர்வேஸ் விமானம்  விபத்தில் சிக்கியபோது 11A இருக்கையில் அமர்திருந்தவர் உயிர் பிழைத்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

அகமதாபாத்தில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் (40), விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.

அவசரகால வெளியேறும் வழிக்கு அருகில் அமர்ந்திருந்த அவர், விபத்தின்போது விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, காயங்களுடன் தப்பித்துள்ளார்.

“நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, இது ஒரு அற்புதம்” என்று ரமேஷ் கூறினார். இந்தச் சம்பவம் உலக அளவில் வியப்பையும், 11A இருக்கை மீது ஒரு ராசி இருப்பதாகவும் நம்பவைத்தது.

Advertisement

இந்நிலையில்  தாய்லாந்து நடிகரும்   பாடகருமான  ரூங்சக் லோய்சுசக் (47), 27 ஆண்டுகளுக்கு முன்பு  அதாவது 1998 டிசம்பர் 11 அன்று  தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளானபோது  அவரும் 11A இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.   

அந்த விபத்தில் 146 பேரில் 101 பேர் உயிரிழந்த நிலையில்  11A இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் மட்டும் உயிர்  பிழைத்துள்ளார்.

தற்போது  அகமதாபாத் விபத்தில் 11A இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்ததை அறிந்த ரூங்சக்,

Advertisement

 எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தார்  என  பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.   

 மேலும் ஏர் இந்தியா  விமான விபத்தில்  உயிரிழந்தவர்களுக்கும்  தாய்லாந்து நடிகரும் பாடகருமான ரூங்சக் லோய்சுசக்  தனது அஞ்சலியை ரூங்சக்  தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன