Connect with us

உலகம்

’12 ஆண்டுகளாக மகளை சுமக்கும் தந்தை’-நெகிழ்ச்சியூட்டும் தன்னம்பிக்கை

Published

on

Loading

’12 ஆண்டுகளாக மகளை சுமக்கும் தந்தை’-நெகிழ்ச்சியூட்டும் தன்னம்பிக்கை


கலைமோகன்

Photographer

Published on 10/06/2025 | Edited on 10/06/2025

‘மயஸ்தீனியா கிராவிஸ்’ எனும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகளை கடந்த 12 ஆண்டுகளாக தந்தை பள்ளிக்கும், கல்லூரிக்கும் சுமந்து செல்லும் நிகழ்வு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சஞ்சியாங் டோங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவோ யாலின். இவர் சிறு வயதில் இருந்தே மயஸ்தீனியா கிராவிஸ் எனும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தனியாக நடக்க முடியாத சூழல் காவோ யாலினுக்கு ஏற்பட்டது. இதனால் பள்ளி பருவத்தில் இருந்தே தந்தை அவரை உப்பு மூட்டை ஏற்றி விளையாடுவோமே அதுபோல் சுமந்து சென்றுள்ளார். முதிகிலேற்றியே மகளின் பள்ளி படிப்பை நிறைவு செய்து வைத்த தந்தை தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக ஆயத்தமான காவோ யாலினை வழக்கம் போல முதுகில் ஏற்றிக்கொண்டு தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டு சென்றார்.

Advertisement

உள்ளே நுழைவதற்கு முன், காவோ தனது தந்தையை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து, “அப்பா, இத்தனை வருடங்கள் என்னை சுமந்ததற்கு நன்றி. உங்களைப் பெருமைப்படுத்த நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என நன்றியுடன் கிசுகிசுத்தார். ‘உன் லட்சியத்தில் கவனம் செலுத்து. என் தோள்கள் எப்போதும் உன்னை தாங்கும்’ என நெகிழ்ந்தார் தந்தை.

தந்தை காவோ குவாங்சிங்கின் கூற்றுப்படி, ‘தினசரி வழக்கத்தில் அதிகாலையில் தனது மகளுக்கு காலை உணவைத் தயாரிப்பது. நேர்த்தியாக உடை அணிய வைத்து சுமந்தபடி வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையில் தினமும் இரண்டு முறை கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எந்த காரணத்திற்காகவும் அவர் ஒரு நாளைக் கூட தவறவிட்டதில்லையாம். ஒரு முறைகூட தாமதமாகவும் வந்ததில்லையாம்.

‘காவோ யாலின் மற்றும் அவரது தந்தையின் கதை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது’ என காவோ யாலின் தலைமை ஆசிரியர் யாங் ஜான்லியு கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாது யாலின் வகுப்புத் தோழர்களும் தானாக முன்வந்து உணவு விடுதியில் இருந்து உணவைக் கொண்டு வந்து தங்களால் இயன்ற அளவு கொடுத்து உதவி வருகிறார்கள்.

Advertisement

‘சவால்கள் இருந்த போதிலும், தொடர்ந்து வகுப்பில் முதலிடத்தைப் பிடித்து வரும் காவோ யாலின் சிரமங்களைத் தாண்டி முன்னேறிச் எதிர்காலத்தில், சமூகத்திற்கு பயனுள்ள நபராக மாற வேண்டும் என்பதே என் ஆசை’ விருப்பத்தை தெரிவித்துள்ளார்’ 12 ஆண்டுகளாக மகளை சுமக்கும் அந்த தந்தை.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • அரசு மாதிரிப் பள்ளி மீது அதிரடி நடவடிக்கை! நக்கீரன் செய்தி எதிரொலி!

  • படையப்பா படக் காமெடியை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

  • சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்; ஜாமீனில் வெளியே வந்து கணவர் வெறிச்செயல்!

  • பதிலடி தாக்குதல் நடத்தும் ஈரான்; இஸ்ரேலின் எச்சரிக்கையால் போர் பதற்றம்!

  • அணில், கீரிப்பிள்ளையின் ரோமத்தில் பிரஸ் தயாரிப்பு; வனத்துறை அதிகாரிகள் அதிரடி!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன