Connect with us

தொழில்நுட்பம்

IP ரேட்டிங் என்றால் என்ன? வெறும் ரூ.13,000 முதல் வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள்! செக் பண்ணி பாருங்க!

Published

on

waterproof-smartphones

Loading

IP ரேட்டிங் என்றால் என்ன? வெறும் ரூ.13,000 முதல் வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள்! செக் பண்ணி பாருங்க!

ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சமையலறை அல்லது குளியலறையாக இருந்தாலும், பலர் இப்போது இசையைக் கேட்கவோ அல்லது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்க பழகிவிட்டனர். அத்தகைய சூழ்நிலையில், செல்போன் தவறி தண்ணீரில் விழுந்தாலோ (அ) மற்ற காரணத்திற்காக செல்போனில் தண்ணீரில் பட்டாலோ பிரச்னை ஏற்படும். இந்த சிக்கலைத் தவிர்க்க, IP68 அல்லது IP69 மதிப்பீட்டைக் கொண்ட (நீர்ப்புகா) வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது. வெறும் ரூ.13,000 முதல் வாட்டர்ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. சில பட்ஜெட் மற்றும் பிரீமியம் வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.ஸ்மார்ட்போன்களின் நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறனை ‘IP’ (Ingress Protection) மதிப்பீடு கொண்டு குறிப்பிடுகின்றனர். இது 2 இலக்கங்களைக் கொண்டது.   மதிப்பீடு                                    பாதுகாப்பு நிலை      IP67                            1 மீ. ஆழம் வரையிலான நீரில் 30 நிமிடங்கள் வரை பாதுகாக்கும்.     IP68                            1.5 மீ. அதிகமான ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை பாதுகாக்கும்.     IP69K                         அதிக அழுத்தம், வெப்பநிலை கொண்ட நீர் பீய்ச்சியடிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும்.1. ரியல்மி பி 3 எக்ஸ் 5 ஜி – ரூ .12,999IP மதிப்பீடு: IP68 + IP69ரேம் / சேமிப்பு: 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்புடிஸ்பிளே: 6.72 அங்குல பெரிய திரைசெயலி: MediaTek Dimensity 6400பேட்டரி: 6,000mAh, 45W பாஸ்ட் சார்ஜிங்2. ரெட்மி நோட் 14 ப்ரோ 5G – ரூ.20,239 மட்டுமே (சலுகையில்)அசல் விலை: ரூ.21,489, தள்ளுபடிக்குப் பிறகு, நீங்கள் ரூ.20,239 க்கு மட்டுமே பெறுவீர்கள்.IP மதிப்பீடு: IP68ரேம் / சேமிப்பு: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ்கேமரா: 50MP 3. மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5 ஜி – ரூ .22,999IP மதிப்பீடு: IP68டிஸ்பிளே: 6.67-இன்ச்கேமரா: 50MP மெயின் கேமிராபேட்டரி: 5,500mAh, 68W பாஸ்ட் சார்ஜிங்4. ஒப்போ ரெனோ 13 5ஜி – ரூ.32,400 சலுகைIP மதிப்பீடு: IP66 + IP68 + IP69ரேம் / சேமிப்பு: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ்செயலி: MediaTek Dimensity 8350இந்த போனில் ட்ரிபிள் வாட்டர் ப்ரூஃப் பாதுகாப்பு கிடைக்கும்.5. சாம்சங் கேலக்ஸி எஸ் 25 5 ஜி – ரூ .65,790IP மதிப்பீடு: IP68ரேம் / சேமிப்பு: 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்புசெயலி: ஸ்னாப்டிராகன் 8 எலைட்காட்சி: 6.2 அங்குல டைனமிக் AMOLEDவாட்டர் ப்ரூஃப் போனை எவ்வாறு பராமரிப்பது?போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?உடனடியாக போனை நீரிலிருந்து வெளியே எடுத்து, சுவிட்ச் ஆஃப் செய்யவும். சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை அகற்றவும். மென்மையான, உலர்ந்த துணியால் போனை முழுமையாகத் துடைக்கவும். சார்ஜிங் போர்ட், ஸ்பீக்கர் கிரில் போன்ற பகுதிகளில் உள்ள நீரை மெதுவாகத் தட்டி வெளியேற்றவும். போனை அரிசிக்குள் வைப்பதை விட, காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது. சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் இருந்தால், அவற்றுடன் சேர்த்து ஒரு காற்றுப் புகாத பையில் வைக்கலாம். குறைந்தது 24 முதல் 48 மணி நேரம் வரை போனை ஆன் செய்யவோ, சார்ஜ் செய்யவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன