சினிமா
குக் வித் கோமாளி சீசன் 6 இந்தவார எலிமினேஷன் யார் தெரியுமா..?

குக் வித் கோமாளி சீசன் 6 இந்தவார எலிமினேஷன் யார் தெரியுமா..?
விஜய் டிவியின் பிரபல குக்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ தனது ஆறாவது சீசனுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிக் பாஸ் புகழ் ராஜு, லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, பிரியா ராமன், கஞ்சா கறுப்பு உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டு விறுவிறுப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ஒரு போட்டியாளர் வெளியேறிய நிலையில் இரண்டாவது வார எலிமினேஷனில் அனைவரும் எதிர்பார்த்ததை போலவே காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டுள்ளார். இன்றைய எபிசோடில் நடுவர்கள் தங்களது Signature Dish செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுத்தனர். இதில் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் கஞ்சா கறுப்பு செய்த உணவு நிராகரிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக நடுவர்கள் இறுதியில் கஞ்சா கருப்பை எலிமினேட் செய்ய முடிவு செய்தனர். அவர் எலிமினேஷனை சிரித்த முகத்துடன் ஏற்று நன்றி தெரிவித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரது எலிமினேஷனுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.