Connect with us

சினிமா

அஜித் அண்ணாவையும் ஷாலினி அண்ணியையும் மிகவும் நேசிக்கிறேன்.!நடிகர் சதிஷின் எக்ஸ்தளபதிவு..!

Published

on

Loading

அஜித் அண்ணாவையும் ஷாலினி அண்ணியையும் மிகவும் நேசிக்கிறேன்.!நடிகர் சதிஷின் எக்ஸ்தளபதிவு..!

தமிழ் சினிமாவில் தவிக்க முடியாத  நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர்  இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள் கொடுத்தார். அந்த வகையில்  விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் “குட் பேட் அக்லி ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியில் சாதனை படைத்து இருந்தது. இந்த நிலையில் உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதுடன். தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என சினிமாத்துறையினர்  கூறிவருகின்றனர் .மேலும் தமிழ் சினிமாத்துறையில்  முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக  வலம் வருபவர் சதீஸ். இவர் தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து விலகி முழுமையாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது கான்ஜுரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் என ஹீரோவாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில்  அஜித் மற்றும் ஷாலினியை நேரில் சென்று சந்த்தித்துள்ளார்.அங்குஎடுத்த புகைப்படத்தினை சதிஷ் தனது எக்ஸ்தள பக்கத்தில பதிவிட்டுள்ளார் .மேலும் அந்த பதிவில் “மிகவும் பணிவான, மென்மையான மனிதர் அஜித் அண்ணாவையும் ஷாலினி அன்னியையும் மிகவும் நேசிக்கிறேன் ” என்ற பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன