Connect with us

சினிமா

கணவருடன் போட்டி போடும் தந்தை.. வீடியோவை பகிர்ந்து நடிகை வரலட்சுமி எமோஷ்னல்

Published

on

Loading

கணவருடன் போட்டி போடும் தந்தை.. வீடியோவை பகிர்ந்து நடிகை வரலட்சுமி எமோஷ்னல்

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.கடைசியாக இவரது நடிப்பில் எப்போதோ உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இப்போது வரலட்சுமி, விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் கமிட்டாகி இருக்கிறார்.பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மும்பையை சேர்ந்து நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.அதில், அவரது கணவர் மற்றும் தந்தை இருவரும் நின்று கொண்டு சிக்ஸ் பேக்ஸ் காட்டுவது, அவரது காமெடி போட்டோஸ் என சரத்குமாரின் சேட்டை காட்சிகள் அனைத்தும் இடம் பெற்றது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.     

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன