Connect with us

சினிமா

தக் லைஃப் முத்த மழை பாடல், த்ரிஷாவுக்கு ஒத்தே வரவில்லை.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Published

on

Loading

தக் லைஃப் முத்த மழை பாடல், த்ரிஷாவுக்கு ஒத்தே வரவில்லை.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்து காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.படத்தின் பெரிய ஹைலைட்டாக மாறியது முத்த மழை பாடல். தமிழில் தீ பாடியதைவிட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியது மிகப்பெரிய ட்ரெண்டானது. ஆனால், படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. இதனால், பல விமர்சனங்கள் எழுந்தது.இந்நிலையில், முத்த மழை பாடலை படக்குழு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் பலர் என்ன மணி சார் இது. தீயின் குரலுக்கும் திரிஷாவுக்கும் ஒத்தே வரவில்லை. எப்படி இதை ஷூட் செய்தீர்கள் என்று ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன