சினிமா
இரட்டை வேடத்தில் ஆட்டம் காட்ட ரெடியாகும் அதர்வா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட்நியூஸ்..

இரட்டை வேடத்தில் ஆட்டம் காட்ட ரெடியாகும் அதர்வா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட்நியூஸ்..
தமிழ் சினிமாவில் தனது மென்மையான தோற்றத்தாலும், தேர்ந்தெடுத்த வித்தியாசமான கதைகளாலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் அதர்வா. ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அதனை அடுத்து பல வெற்றிப் படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார்.இப்போது,’DNA’ எனும் படத்துடன் திரைக்கு வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அதர்வா மிக விரைவில் ஒரு புதிய ஆக்ஷன் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘DNA’ திரைப்படம், அதர்வாவுக்கு ஒரு புதிய கதையமைப்பில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜூன் 20ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, ‘வலை’ (Valai) எனும் புதிய திரைப்படத்தில் அதர்வா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இது அவருடைய திரையுலக பயணத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் முயற்சி ஆகும்.இப்படம் முழுமையாக ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதையமைப்பில் உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.