Connect with us

பொழுதுபோக்கு

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் ஐ.டி. சோதனை: சென்னையில் மட்டும் 5 இடங்களில் ரெய்டு!

Published

on

IT Raid Arya

Loading

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் ஐ.டி. சோதனை: சென்னையில் மட்டும் 5 இடங்களில் ரெய்டு!

சென்னையில், நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பை விடவும் தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமாக உணவகங்கள் உள்ளன. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் ஆர்யாவுக்கு 5 இடங்களில் சீஷெல் என்ற பெயரில் ஹோட்டல்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள சீஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன