Connect with us

சினிமா

100-க்கும் மேற்பட்ட படங்கள்!! ரத்த புற்றுநோயால் மரணமடைந்த பிரபல நடிகை..

Published

on

Loading

100-க்கும் மேற்பட்ட படங்கள்!! ரத்த புற்றுநோயால் மரணமடைந்த பிரபல நடிகை..

70-களில் ஆரம்பித்து 2000 ஆம் ஆண்டு வரை தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய நடனத்தை அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜோதி லக்ஷ்மி. முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ஜோதி லக்ஷ்மி, நடிகை ஜெயமாலினியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, என் டி ஆர் ஆகியோருடனும் இணைந்து நடித்திருக்கிறார் ஜோதி லக்ஷ்மி. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜோதி லக்ஷ்மி, நடனப்பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.1999ல் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் கானா கருங்குயிலே என்ற பாடலில் ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அப்படி கொடிக்கட்டி பறந்த ஜோதி லக்ஷ்மியின் இறுதிநாட்கள் புற்றுநோயுடனான போராட்டத்தில் முடிவடைந்தது.ஜோதி லக்ஷ்மிக்கு ரத்த புற்றுநோய் இருந்துள்ளது. நோய் இருப்பது கண்டறியப்பட்ட 20 நாட்களில் சிகிச்சை பலனின்றி ஜோதி லக்ஷ்மி மரணமடைந்தார். கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, அவரது 63வது வயதில் காலாமானார் நடிகை ஜோதி லக்ஷ்மி.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன