
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 20/06/2025 | Edited on 20/06/2025

வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகியுள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாம். கடைசி நாளில் அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் அவர் மிகவும் எமோஷ்னலாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டு முடிந்தது. விரைவில் முழு படப்பிடிப்பும் முடியவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி, படத்தின் முன்னோட்டம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 22ஆம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்து அது தொடர்பான ஒரு புது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அப்போஸ்டரில் விஜய் கை உயர்த்தியபடி நின்று கொண்டிருக்க அவரை சுற்றி மக்கள் கூட்டம் கீழே நிற்கிறார்கள். இந்த போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
A lion is always a lion
& his first roar is incoming 🔥June 22 | 12.00 AM#JanaNayaganTheFirstRoar #JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss… pic.twitter.com/a0PZ67R4MF
— KVN Productions (@KvnProductions) June 20, 2025
<!–
–>
<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
–>