நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 21/06/2025 | Edited on 21/06/2025

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வந்தார் சூர்யா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து பின்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கமிட்டானார். படத்திற்கான படப்பிடிப்பு கோவையில் பூஜையுடன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சூர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அவர் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். 

ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க, லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ஷிவதா, நட்டி, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பிறந்தநாளான நேற்று போஸ்டருன் வெளியானது. கருப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலஜி, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் கருப்பு பட டைட்டில் போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி ஒரு  பதிவை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், அடுத்த மாதம் முக்கியமான நாளில் பெரிய விருந்து தயாராகி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாள் என்பதால் அந்த நாளில் படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.