Connect with us

பொழுதுபோக்கு

முதல் படம் பெரிய ஹிட்; அதன்பிறகு வாய்ப்பு இல்லை: ஒரே படத்துடன் வெளியேறிய தமிழ் சினிமா நடிகைகள்!

Published

on

Manu Priyanka Ko

Loading

முதல் படம் பெரிய ஹிட்; அதன்பிறகு வாய்ப்பு இல்லை: ஒரே படத்துடன் வெளியேறிய தமிழ் சினிமா நடிகைகள்!

ஒரு நடிகை தான் நடித்த முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தால், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அதிகரித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகைகள், முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்று முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளனர். அதே சமயம் சில நடிகைகள் தங்கள் முதல் படம் பெரிய ஹிட்டாக அமைந்திருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.இந்த நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் மட்டுமே நடித்து அந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அடுத்து பட வாய்ப்பு இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறிய நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ரோஷினிகமல்ஹாசன் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான குணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஷினி. மும்பையைச் சேர்ந்த இவர், குணா படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. அதே சமயம், குணா படத்தில் வரும் ‘கன்மணி அன்போட காதலன்’ என்ற பாடலை கேட்கும்போது ரசிகர்களுக்கு இவர் தான் நினைவுக்கு வருவார். ஷாஹீன் கான்இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாஹீன் கான். 2000-ம் ஆண்டு சிறு நவுதோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், கடைசியாக 2002-ம் ஆண்டு வெளியான யூத் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. சிறு நவுதோ என்ற தெலுங்கு படம் தான் யூத் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது பிரியங்கா கோத்தாரிஇயக்குனர் சரண் இயக்கத்தில் மாதவன் பூஜா நடிப்பில் வெளியான படம் ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா கோத்தாரி. மேற்குவங்கத்தை சேர்ந்த இவர், அறிமுகமான முதல் படம் ஜே.ஜே.தான். அதன்பிறகு தமிழில் நடிக்காத இவர், ஓரிரு படங்களில் டான்ஸ் மட்டும் ஆடியுள்ளார். கீத்து மோகன்தாஸ்குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லைஃப் ஈஸ் ஃபியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்த இவர், 2003-ம் ஆண்டு மாதவனுடன் நள தமயந்தி, 2006-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இயக்குனராக 3 படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது கே.ஜி.எஃப் புகழ் நடிகர் யஷ் நடிப்பில் டாக்ஸிக் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரியா கில்சிங்கம்புலி இயக்கத்தில், அஜித் நடித்த ரெட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா கில். மலையாளம், இந்தி, தெலுங்கு, பேஜ்பூரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் நடித்த முதல் மற்றும் கடைசி படம் ரெட்.மோனிகா காஸ்டெலினோகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோனிகா காஸ்டெலினோ. இந்தி தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர், தமிழில் மின்சார கண்ணா படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் ‘உன் பேர் சொல்ல ஆசைதான்’ பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மானுசரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மானு. இந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்காத இவர், 2014-ம் ஆண்டு வெளியான என்ன சத்தம் இந்த நேரம் என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன