பொழுதுபோக்கு
ஜனநாயகன் தான் கடைசி படமா? விஜய் சொன்னது என்ன? ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை மமிதா பைஜூ!

ஜனநாயகன் தான் கடைசி படமா? விஜய் சொன்னது என்ன? ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை மமிதா பைஜூ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய விஜய் இதுதான் தனது கடைசி படம் என்றும், இதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதனால் திரையுலக ரசிகர்கள் பலரும் கடும் சோகத்தில் ஆழ்ந்தனது.இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகை மமிதா பைஜு, சமீபத்தில் அயர்லாந்தில் நடைபெற்ற ‘கேரளா கார்னிவல்’ நிகழ்வில், விஜய்யின் திரையுலக ஓய்வு குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள கார்னிவல் விழாவில் மமிதா பைஜுவிடம், “விஜய்யின் எதிர்கால ஓய்வுத் திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினீர்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.இந்த கேள்விக்கு மலையாளத்தில் பதிலளித்த மமிதா, “ஒரு நாள் படப்பிடிப்பின் போது, சாதாரணமாக அவரிடம், ‘ஜன நாயகன் தான் உங்களுக்கு கடைசிப் படமா? எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிறாங்க’ என்று கேட்டேன். அதற்கு விஜய் சார் தயக்கமில்லாமல், ‘தேர்தல் முடிவுகளைப் பொறுத்துதான் அது தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று பதிலளித்தார்” என்று கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பின் கடைசி நாட்களில் அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், இறுதி நாளில் விஜய்யும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் மமிதா குறிப்பிட்டார். #MamithaBaiju about VijayI asked Vijay Sir, “ Will this be the last film ? Everyone is saying so. ”He replied, “ Don’t know, it will depend on the election results .”#JanaNayagan | #HBDThalapathyVijaypic.twitter.com/yVFUPHkkPcமமிதாவின் இந்தப் பேச்சின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது விஜய்யின் ரசிகர்களுக்கு, தங்கள் தலைவன் தொடர்ந்து நடிக்க வாய்ப்புள்ளதை அறிந்த பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. ஹெச். வினோத் இயக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று, இப்படத்தின் முதல் பார்வை “தி ஃபர்ஸ்ட் ரோஅர்” (The First Roar) என்ற தலைப்பில் வெளியானது. 51 வயதாகும் விஜய், இந்தக் காணொளியில் போலீஸ் கேரக்டரில் காட்சி அளித்திருந்தார். விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) படத்தில் இரட்டை வேடங்களில் (தந்தை மற்றும் மகன்) நடித்திருந்தார். சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ‘தி கோட்’ திரைப்படம் தற்போது நெட்ஃபிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.’ஜன நாயகன்’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.