பொழுதுபோக்கு
வாளுடன் காக்கிச்சட்டை: ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி; மிரட்டல் டீசர்!

வாளுடன் காக்கிச்சட்டை: ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி; மிரட்டல் டீசர்!
தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘ஜன நாயகன்’ படத்தின் ‘தி ஃபர்ஸ்ட் ரோர்’ (The First Roar) என்ற sneak peek-ஐ KVN Productions நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படம், விஜய் அரசியலில் நுழைவதற்கு முன், அதாவது அவரது கட்சி 2026 தமிழ்நாடு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், அவர் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும்.இந்த ஸ்னீக் பீக், “உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக வருவதில்லை, மக்களுக்காகவே எழுகிறார்” (“A true leader rises not for the power, but for the people”) என்ற வாசகத்துடன் தொடங்குகிறது. பின்னர், காவல்துறை சீருடையில், கருப்பு கண்ணாடியுடன் விஜய் திரையில் தோன்றுகிறார். ஒரு வயல்வெளியில், தீப்பற்றி எரியும் சில பகுதிகளுக்கு மத்தியில் கூட்டத்தினரை நோக்கி அவர் வாளை ஏந்தியபடி வருகிறார். ரத்தம் வழிய, வாளால் தனது மீசையை சரிசெய்கிறார். இந்த டீசர் “நாம் ஒன்றாக எழுவோம்” (“Let’s rise together”) என்ற வார்த்தைகளுடன் முடிவடைகிறது.அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாபி தியோலுக்கு 2-வது தமிழ்ப் படம். கடந்த ஆண்டு வெளியான சிவாவின் காவிய அதிரடி மற்றும் பேன்டஸி படமான ‘கங்குவா’ மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பாபி. அப்படத்தில் சூர்யாவுடன் மோதும் முக்கிய வில்லனாக அவர் நடித்திருந்தார்.பூஜா ஹெக்டேவும் விஜய்யும் இதற்கு முன் 2022-ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பூஜா ஹெக்டே PTI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அவரை திரையில் பார்ப்பதை விரும்பும் ஒரு நபராக, நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால், அவரது பயணத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன். நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். எனவே, அவருக்கு மேலும் பலம் கிடைக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரியில், தற்போதைய திமுக அரசின் பதவிக்காலம் முடிவடையும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றிக்கழகம்’ என பெயரிட்டு, தற்போது நிலவும் “நிர்வாகச் சீரழிவு”, ஊழல் மற்றும் ஒற்றுமையைத் தடுக்கும் “பிளவுபடுத்தும் அரசியல்” ஆகியவற்றால் நிறைந்த அரசியல் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.KVN Productions தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜன.9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். இது மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு (ஜனவரி 14, 2026) சற்று முன்னதாக வெளியாகிறது. 2025-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, ‘தளபதி’ விஜய் தனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தார். அப்போது, வெளியான படத்தின் முதல் போஸ்டரில், ஏராளமான மக்கள் பின்னணியில் இருக்க, அவர்களுடன் விஜய் செல்ஃபி எடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.வெங்கட் பிரபு இயக்கத்தில், AGS எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான (GOAT) திரைப்படத்தில்தான் விஜய் கடைசியாக நடிந்திருந்தார். அறிவியல் புனைகதை மற்றும் அதிரடித் திரைப்படமான இது, 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. உளவாளியின் பணி தவறாகப் போய், பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் கதாபாத்திரத்தையும் அவரது குடும்பத்தையும் எப்படிப் பின்தொடர்ந்து துன்புறுத்துகிறது என்பதையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு தீர்க்கிறார்கள் என்பதையும் கதைக்களம் மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் 2024 செப்.5 அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் ₹464.41 கோடி வசூலித்து பெரும் வெற்றியைப் பெற்றது.