சினிமா
ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து!! 30 ஆண்டுகள் படுத்தபடுக்கை!! மரணமடைந்த பாரதிராஜா பட நடிகர்..

ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து!! 30 ஆண்டுகள் படுத்தபடுக்கை!! மரணமடைந்த பாரதிராஜா பட நடிகர்..
இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பல கலைஞர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அந்தவரிசையில் பாரதிராஜாவால் அறிமுகமானவர் நடிகர் பாபு. என் உயிர் தோழன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் பாபு.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பாபு, மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சண்டைக்காட்சி ஒன்றில் மாடியில் இருந்து ஹீரோ குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது டூப் இல்லாமல் நடித்த பாபு, வேண்டாம் என்று வற்புறுத்தியும் நடித்துள்ளார். ரிஸ்க் இல்லை, நானே குதித்தால் தான் தத்ரூபமாக இருக்கும் என்று சொல்லி மாடியிலிருந்து குதித்திருக்கிறார்.அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், பாபு தடுமாறி தவறுதலாக வேறொரு இடத்தில் விழுந்து அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு முதுகு தண்டுவட எலும்பு உடைந்துள்ளது. பின் அவருக்கு அளித்த சிகிச்சைக்கு பின் உட்காரும் அளவிற்கு குணமடைந்தார், அதுவும் சில நாட்கள் கூட நீடிக்காமல் படுத்தபடுக்கையாகினார்.வீட்டில் படுத்த படுக்கையில் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். பலர் உதவிய நிலையில் 30 ஆண்டுகளாக படுத்தபடுக்கையில் ஒரு ஓட்டு வீட்டிற்குள் வாழ்ந்து கடந்த 2023ல் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பிற்கு பாரதிராஜா மனமுடைந்து அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.