Connect with us

வணிகம்

உங்க யு.ஏ.என் நம்பரை ஈசியா ஆன்லைனில் செக் பண்ணலாம்; இந்த ஸ்டெப்ஸை நோட் பண்ணுங்க

Published

on

EPF interest

Loading

உங்க யு.ஏ.என் நம்பரை ஈசியா ஆன்லைனில் செக் பண்ணலாம்; இந்த ஸ்டெப்ஸை நோட் பண்ணுங்க

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு தனித்துவமான அம்சத்தை வழங்குகிறது. அதுதான் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN). ஊழியர்கள், தங்கள் பி.எஃப் கணக்குகளை அணுகவும், நிர்வகிக்கவும் இது ஒரு எளிதான வழியை வழங்குகிறது. ஆனால், உங்கள் UAN எண்ணை எவ்வாறு பெறுவது அல்லது சரிபார்ப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? UAN என்றால் என்ன?UAN என்பது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) என்பதன் சுருக்கமாகும். இது ஒரு தனிநபருக்கு வெவ்வேறு நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட பல உறுப்பினர் ஐடிகளை (Member IDs) இணைக்கும் ஒரு பொதுவான எண் என்பது குறிப்பிடத்தக்கது.உங்கள் UAN எண்ணை எவ்வாறு அணுகுவது?உங்கள் UAN எண்ணை ஆன்லைனில் சரிபார்க்கும் வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன:1: முதலில், இ.பி.எஃப் வலைதளத்திற்கு செல்லவும். பின்னர், ‘சேவைகள்’ (Services) என்ற பகுதிக்குச் சென்று, ‘பணியாளர்களுக்கானது’ (For Employees) என்பதை தேர்ந்தெடுக்கவும்.2: இப்போது, ‘சேவைகள்’ பிரிவின் கீழ், ‘உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை’ (Member UAN/Online Service) என்பதற்கு செல்லவும்.3: இதை நீங்கள் கிளிக் செய்தவுடன், உங்களுடைய ‘உறுப்பினர் இன்டர்ஃபேஸ்’ (Member Interface) பக்கத்திற்குள் நுழைவீர்கள். இங்கு, கீழ்ப்பகுதியில் வலதுபுறத்தில், ‘Know your UAN’ என்ற இணைப்பு இருக்கும். நீங்கள் இதை கிளிக் செய்ய வேண்டும். 4: இப்போது உங்கள் விவரங்களை உள்ளிட வேண்டும். மேலும், கைபேசி எண் மற்றும் கேப்ட்சா (Captcha) குறியீடு உள்ளிட்டவற்றை சரியாக கொடுக்க வேண்டும். இந்த விவரங்களை உள்ளிட்ட பிறகு, இ.பி.எஃப் பக்கம் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு, உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ‘Show my UAN’ என்பதை கிளிக் செய்யலாம்.5: இறுதியாக, உங்கள் UAN எண்ணை நீங்கள் திரையில் காணலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன