நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 23/06/2025 | Edited on 23/06/2025

coolie Chikitu Music Video promo released

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து கடந்த மார்ச் மாதம் முடிந்திருந்தது. இதனிடையே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின்பு ‘சிக்குடு வைப்’ என்ற பாடலில் கிளிம்ஸ் வெளியாகியிருந்தது. அடுத்து படம் வெளியாகுவதற்கு 100 நாட்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியானது. இதில் பின்னணியில் இடம் பெற்ற ‘பவர்ஹவுஸ்’ பாடம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. 

Advertisement

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து ‘சிக்குடு வைப்’ பாடலின் வீடியோ அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்பாடல் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள புரொமோவில் அனிருத் மற்றும் நடன இயக்குநர் சாண்டி இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டி.ராஜேந்தர், அறிவு, அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர். அறிவே எழுதியுள்ளார். மியூசிக் வீடியோவில் டி.ராஜேந்தரும் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.