சினிமா
நடிகை தமன்னாவுடன் பிரேக் அப்.. புதிய காதலியுடன் சுற்றி வரும் விஜய் வர்மா, யார் பாருங்க

நடிகை தமன்னாவுடன் பிரேக் அப்.. புதிய காதலியுடன் சுற்றி வரும் விஜய் வர்மா, யார் பாருங்க
தென்னிந்திய சினிமாவில் பட்டய கிளப்பிய நடிகைகளில் ஒருவர் தமன்னா. இப்போது முழு கவனத்தையும் பாலிவுட்டில் செலுத்தி வருகிறார். கடைசியாக தமிழில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது.அந்த படத்தில் இவர் அச்சச்சோ பாடலுக்கு போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. அதோடு ஹிந்தியிலும் கலக்கிவரும் தமன்னா விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்தார்.இருவரும் காதலிக்க தொடங்கி எப்போது வெளியே வந்தாலும் ஜோடியாகவே சுற்றி வந்தார்கள், ஆனால் சில மாதங்களுக்கு முன் இவர்கள் பிரேக் அப் செய்தது தெரிய வந்தது.விஜய் வர்மாவை பிரிந்த பின் தமன்னா தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.இந்நிலையில் நடிகர் விஜய் வர்மா, தனது புதிய காதலியை தேர்வு செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.அமீர்கானின் தங்கல் பட நடிகை பாத்திமா சனாவுடன் தான் விஜய் வர்மா டேட்டிங்கில் இருக்கிறாராம். தற்போது, இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.