சினிமா
கையில் சைக்கிள்ளுடன் நடிகர் அஜித்தின் புது லுக்…!வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..!

கையில் சைக்கிள்ளுடன் நடிகர் அஜித்தின் புது லுக்…!வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் நடிப்பின் மூலமும் கார் ரேஸ் மூலமும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளிக்யான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படித்து இருந்தது . இந்த நிலையில் அஜித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது .இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த இந்த படத்தில் அவர் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார் .மேலும் இந்த படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர் .மேலும் அஜித்தின் அடுத்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அஜித் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் சைக்கிள் ஒட்டி பதிவிட்டுள்ளார். மேலும் அதில் நடிகர் அஜித், வழக்கமான ஸ்லாட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல்,வித்தியாசமாக வேதாளம் படத்திற்கு எப்படி ஒரு லுக்கில் இருந்தாரோ அதேபோன்று உள்ளதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ …!