Connect with us

சினிமா

தமன்னாவுடன் காதல் முறிவு.. புதிய காதலியுடன் டேட்டிங் செய்து வரும் விஜய் வர்மா?

Published

on

Loading

தமன்னாவுடன் காதல் முறிவு.. புதிய காதலியுடன் டேட்டிங் செய்து வரும் விஜய் வர்மா?

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் வர்மா மற்றும் முன்னணி நடிகையான தமன்னா இருவரும் காதலித்து வந்ததை நாம் அறிவோம்.கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், திருமணம் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.இவர்களுடைய காதல் முறிவுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. தமன்னா உடனான காதல் முறிவுக்கு பின் தனது புதிய காதலியை விஜய் வர்மா தேர்வு செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.பிரபல ஹிந்தி நடிகை பாத்திமா சனா ஷேக்தான் நடிகர் விஜய் வர்மாவின் புதிய காதல் என்றும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் ஊடங்கங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பாத்திமா சனா ஷேக் இதற்குமுன் நடிகர் அமீர் கானின் தங்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் அமீர் கானை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன