பொழுதுபோக்கு
மொட்டை தலையுடன் அஜித்; அடுத்த படத்திற்கான கெட்டப்பா? வைரல் வீடியோ!

மொட்டை தலையுடன் அஜித்; அடுத்த படத்திற்கான கெட்டப்பா? வைரல் வீடியோ!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது நடிப்பு மற்றும் கார்ரேஸ் என சினிமா, விளையாட்டு இரண்டிலும் பங்கேற்று வரும் நிலையில், தற்போது அவர் மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மிகவும் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார், இவரது படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த நாளை திருவிழா போன்று கொண்டாடுவது வழக்கம். நடிப்பு மட்டுமல்லாமல், துப்பாக்கிச்சுடுதல், பைக் மற்றும் கார் ரேஸ் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் இருக்கிறார். அதன் காரணமாக அஜித் தற்போது சர்வதே பைக் ரேஸ் பந்தையத்தில் தனது அணியுடன் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டில் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி, மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்திருந்தார். இதில் விடா முயற்சி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், குடு் பேட் அக்லி அவரது ரசிகர்ளை திருப்திப்படுத்தியது. தற்போது கார் ரேஸில் ஈடுபட்டுள்ள அஜித் தனது அடுத்த படத்தை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதனிடையே, அஜித், தற்போது ஒரு புதிய தோற்றத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் பார்சிலோனாவில் மிகவும் சுத்தமாக வெட்டப்பட்ட மொட்டை தலையுடன் அவர் காணப்பட்டார். இந்தியாவில், இந்த சிகை அலங்காரம் பொதுவாக “பேபி கட்டிங்” என்று அழைக்கப்படுகிறது, தற்போது, வரவிருக்கும் ஐரோப்பிய ரேசிங் தொடருக்காக பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் அஜித் காணப்படுகிறார். அவரது இந்த புதிய தோற்றம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.https://www.instagram.com/reel/DLRhWcmC1bq/?utm_source=ig_web_copy_linkமேலும் இந்த கெட்டப்பை அவர் தனது அடுத்த படத்தில் கொண்டு வரலாம் என்றும் நம்பப்படுகிறது. அஜித் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் ஆதிக் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சினிமா மற்றும் ரேசிங் இரண்டிலும் ஒருசேர பங்கேற்று வரும் அஜித், எப்போதுமே தனது ஒவ்வொரு அசைவாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அவரது இந்த புதிய ‘பேபி கட்டிங்’ தோற்றம் அவரது அடுத்த படத்தின் அறிவிப்புக்கு ஒரு முன்னோட்டமாக இருக்குமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.