இலங்கை
18 நாள்களில் 74,570 சுற்றுலாவிகள்

18 நாள்களில் 74,570 சுற்றுலாவிகள்
இந்த மாதத்தின் முதல் 18 நாள்களில் 74 ஆயிரத்து 570 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து கடந்த 18ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 11 இலட்சத்து 4 ஆயிரத்து 373 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.