இலங்கை
தீயில் எரிந்து முதியவர் பலி

தீயில் எரிந்து முதியவர் பலி
மெழுகுதிரி தவறிவீழ்ந்து தீப்பற்றியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலிப்பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் நாகேந்திரம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய கடும்காற்றின்போது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், மெழுகுதிரியை ஏற்றிவைத்த போது அது தவறிவீழ்ந்து எரிந்துள்ளது. இதன்போது காயமடைந்த அவர் சிகிச்சையின்போது நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.