இலங்கை
3 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

3 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் தொடர்ந்து, 3 ஆவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று பவுணுக்கு 680 ரூபாயால் குறைந்து, ஒரு பவுண் தங்கம் 72,560 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தங்க விலை கிராமுக்கு 85 ரூபாயால் குறைந்து 9,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாயால் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளி, 119,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.