Connect with us

சினிமா

நடிகை சனம் ஷெட்டியின் சகோதரர் விபத்தில் பலி..!

Published

on

Loading

நடிகை சனம் ஷெட்டியின் சகோதரர் விபத்தில் பலி..!

முன்னணி நடிகையும் பிக்போஸ் பிரபலமுமாகிய சனம் ஷெட்டி பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அவரது சகோதரருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து rest in peace என குறிப்பிடுள்ளார்.இந்த நிலையில் இவரது சகோதரர் ராகுல் தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடுள்ளார். மேலும் புகைப்பட பதிவுடன் “இது என் பெற்றோரும் நானும் ஒருபோதும் மீள முடியாத இழப்பு! இந்த கொடூரமான நிகழ்வுகளை எதுவும் நியாயப்படுத்த முடியாது. என் அன்பான சகோதரர் ராகுல், எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உங்களை இழப்போம். நீங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருங்கள் உங்கள் அன்பான இதயத்திற்கும் எங்களுடன் செலவிட்ட உங்கள் விலைமதிப்பற்ற நேரத்திற்கும் நன்றி. நாங்கள் உங்களுக்கு ஒருபோதும் விடைபெற முடியாது விரைவில் உங்களை மறுபக்கத்தில் சந்திப்போம்.” என குறிப்பிடுள்ளார்.இவரிற்கும் இவரது குடும்பத்திற்கும் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன