Connect with us

இலங்கை

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

Published

on

Loading

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளதுடன், இலங்கை 97ஆவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்தாண்டு 101ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 2.075 புள்ளிகளை பெற்று 97ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Advertisement

பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.

முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே பெற்றுக் கொண்டுள்ளன.

Advertisement

இதில் இந்தியா 115ஆவது இடத்தில் உள்ளதுடன், ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக பூட்டான் 21வது இடத்திலும், நேபாளம் 76வது இடத்திலும், சீனா 98ஆவது இடத்திலும் உள்ளன. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன