Connect with us

இலங்கை

உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனத்தில் பனிப்பொழிவு ; “நம்பமுடியாத நிகழ்வு!

Published

on

Loading

உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனத்தில் பனிப்பொழிவு ; “நம்பமுடியாத நிகழ்வு!

உலகின் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனம் பனியால் சூழப்பட்டுள்ளது,” என கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம், X தளத்தில் வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த பனிப்பொழிவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

ஆனால் “இந்த வகையான நிகழ்வு, அட்டகாமா பாலைவனத்தில் மழைப்பொழிவு அடிக்கடி நிகழும்” எனபதை காலநிலை மாதிரியாக்கம் காட்டுகிறது என சாண்டியாகோ பல்கலைக்கழக காலநிலை ஆய்வாளர் ரவுல் கோர்டெரோ ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளார்.

உலகின் இருண்ட வானங்களுக்கு தாயகமான அட்டகாமா, பல தசாப்தங்களாக உலகின் மிகவும் மேம்பட்ட தொலைநோக்கிகளுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகம், அமெரிக்க தேசிய வானொலி வானியல் ஆய்வகம் மற்றும் ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிற ALMA தொலைநோக்கி, மிகவும் சக்திவாய்ந்ததாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அட்டகாமா பாலைவனம், அதன் வறண்ட நிலப்பரப்பு, உப்பு ஏரிகள், மற்றும் எரிமலைப் படிமங்களுக்காகப் புகழ்பெற்றது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூட, செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலப்பரப்புக்கு ஒப்பான பகுதியாக அட்டகாமா பாலைவனத்தைக் கருதுகிறது.

இவ்வளவு வறண்ட ஒரு பகுதியில் பனிப்பொழிவு நிகழ்ந்திருப்பது, காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான விளைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அரிய நிகழ்வுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்களே இந்த பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், வறண்ட பாலைவனப் பகுதிக்குள் ஈரப்பதமான காற்றைக் கொண்டு வந்ததாலேயே இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அட்டகாமா பாலைவனம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ளது.

இதனை உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று, நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,05,000 சதுர கி.மீ (41,000 சதுர மைல்) ஆகும்.

Advertisement

இந்த இடம் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைக்கு பெறுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன