Connect with us

பொழுதுபோக்கு

ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு மணி நேரம் சந்திப்பு: எல்.முருகனின் திடீர் விசிட் பின்னணி என்ன?

Published

on

L Murugan Meets AR Rahman photo goes viral Tamil News

Loading

ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு மணி நேரம் சந்திப்பு: எல்.முருகனின் திடீர் விசிட் பின்னணி என்ன?

இசை உலகின் ஜாம்பவானாக வலம் வருபவர் ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர் ரகுமான். அவரது இசையில் அண்மையில் வெளிவந்த ‘தக் லைஃப்’ படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது தனது இசை தயாரிப்பில் பிஸியாக இருந்து வரும் ஏ.ஆர் ரகுமானை மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக அரசியலுக்கு மிகவும் அப்பாற்பட்டு இருப்பவர் ரகுமான். அவரை எல்.முருகன் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர் ரகுமானை, எல்.முருகன் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். திருவள்ளூர் அய்யர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. அண்மையில், தமிழ் நடிகை மீனா, டெல்லியில் பா.ஜ.க தலைவர்களை சந்தித்தது பேசுபொருளான நிலையில், ஏ.ஆர் ரகுமானை, எல்.முருகன் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன