Connect with us

சினிமா

மூன்று நாளில் இத்தனை கோடியா..? வசூலில் மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி படம்..

Published

on

Loading

மூன்று நாளில் இத்தனை கோடியா..? வசூலில் மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி படம்..

க்ரைம் திரில்லர் வகை படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். ராட்சசன், யுத்தம் செய்தி, துருவங்கள் பதினாறு, டைரி, லெவன் போன்ற படங்களை தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது பேசப்படும் திரைப்படம் ‘மார்கன்’.அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்காலிகமாக நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களிடையே ஓரளவு போதுமான வரவேற்பையும் பெற்றுள்ள இந்த படம் கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ.4.5 கோடி வசூல் செய்துள்ளது.சமீபத்தில் வெளியான மற்ற திரில்லர் படங்களை போலவே ‘மார்கன்’ படமும் அதன் திரைக்கதையுடன் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இனிமேலும் இப்படம் வசூலில் பாரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன